ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு மார்கழி மாத எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெற்றது. இதை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். ஜனவரி 15-ம் தேதி வரை எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெற உள்ளது. எண்ணெய்க்காப்பு திருவிழாவையொட்டி தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் ஆண்டாள் காட்சியளிக்க உள்ளார்.