தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு `பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்தார். எனவே, ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்துள்ளோம். மத்திய அரசுக்கு அடிபணியமாட்டோம். புதிய இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம்' என்றார்.