புதுவை மாநிலம், காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆலயங்களில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டியது அவசியம். அதன்படி, வரும் 11.2.2019 அன்று அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.