தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும்  ஹர்திக் பாண்டியா அண்மையில் பங்கேற்று இருந்தனர். இதில் இவர்கள் பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  24 மணி நேரத்திற்குள் விளக்கம் தரக்கோரி பிசிசிஐ சார்பாக இருவருக்கும் நேட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.