விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் பாலபிஷேகம் செய்தபோது, அஜித் குமார் கட்-அவுட் சரிந்து விழுந்ததில் 6 ரசிகர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படுகாயம் அடைந்த ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.