சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை கேட்டு விவசாயிகள் நான்கு நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மண்டை ஓட்டை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மண் சாப்பிடும் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.