தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூரில் எஸ்.பியாக இருந்த செந்தில்குமார்  ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமாண்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குவிந்த புகார்களே இந்த பணிமாறுதலுக்கு காரணம் எனப் பேசப்படுகிறது.