தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பிரசித்திபெற்ற தீர்த்தத்தொட்டி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தீர்த்தத்தொட்டி எங்கிலும் மதுபாட்டில்களாக காட்சியளிக்கிறது. நூறு வருடப் பழைமையான தீர்த்தத்தொட்டியை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.