உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில்  நேற்று தொடங்கிய கும்பமேளா நிகழ்ச்சியின் முதல் நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இணையும் திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர். நேற்று தொடங்கிய கும்பமேளா நிகழ்வு வரும் மார்ச் 4 -ம் தேதி மகா சிவராத்திரி அன்று நிறைவு பெறுகிறது.