சந்திரனில் முதல் முறையாக ஒரு பருத்தி விதை முளைவிட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் இதனை சாத்தியப்படுத்தியுள்ளது சீனா அனுப்பிய Chang'e 4 என்ற விண்கலம். நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் சீனாவால் அனுப்பப்பட்டது.