ஆப்பிள் நிறுவனத்துக்கும் புராஸசர் சந்தையில் முன்னிலையில் இருக்கும் குவால்காம் நிறுவனத்துக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. காப்புரிமை தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே நடக்கும் வழக்கில் எங்களின் தொழில்நுட்பம் இல்லாமல் ஐபோன்களை யோசித்துக் கூட பார்க்க முடியாது என குவால்காம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.