ஒவ்வொரு ஏகாதசி திதியும் ஒவ்வொரு பெயர் உண்டு. தைமாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி எனப்படும். இந்த நாள் விரதம் புத்ரபாக்கியம் அருளும் சிறப்பினையுடையது. இன்றைய தினத்தில் உபவாசம் இருப்பவர்கள் இருக்கலாம். இயலாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.