பூமியில் இருந்து 500 கிமீ உயரத்தில் செயற்கை கோளை நிறுவி விளம்பரப்பலகைகளை ஏற்படுத்த ஸ்டார் ராக்கெட் என்ற ரஷ்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இரவு நேரங்களில் உலகம் முழுவதுமுள்ள 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்க்க முடிவதுடன், அவரச கால எச்சரிக்கைகளையும் இதன்மூலம் காட்ட முடியும் எனக் கூறியுள்ளது.