உலகம் முழுவதும் கடந்த 2018-ம் வருடம் என்னென்ன ஆப்கள் அதிகமாகப் பதிவிறக்கப்பட்டன, எவற்றுக்கு அதிக ஆக்டிவ் பயனாளர்கள் இருந்தன என்ற வருடாந்திர அறிக்கையை ‘App Annie' என்னும் ஆப் அனலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்களில் ஃபேஸ்புக் முதலிடம் பிடிக்க அதிக ஆக்டிவ் பயனாளர்கள் கொண்ட ஆப்களில் வாட்ஸ் அப் முதலிடத்தைப் பிடித்துள்ளது.