பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இந்திய முன்னாள் நீதிபதி மதன் பி.லேகுர் உள்ளிட்ட பல நீதிபதிகள்  கலந்துகொண்டனர். நீதிபதிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர்கள் முதன்மை அமர்வில் அமரவைக்கப்பட்டனர். 70 ஆண்டுக்கால வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், பாகிஸ்தான் அமர்வில் இருந்தது இதுவே முதல்முறை.