முருகன் சூரனை சம்காரம் செய்த திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்தது. இங்கு தைப்பூசம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா வரும் 21-ம் தேதி  நடைபெற உள்ளது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்; 8.30 க்கு  தீர்த்தவாரி; 10மணிக்கு உச்சிகால அபிஷேகம், ஆகியன நடைபெறும்.