வரும் டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட மொபைல்களுக்கான ஆதரவு நிறுத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 'ஆதரவு நிறுத்தப்படுவதன் காரணமாக ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் இயங்குதளத்திற்கு மாறிக்கொள்ளுங்கள்' என மைக்ரோசாஃப்ட் பயனாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.