வடலூரில் பிறந்த வள்ளலார் இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை  உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்தியஞானசபையை நிறுவினார். வள்ளலார்  நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில், ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.இந்த ஆண்டு ஜோதி தரிசனம், நேற்றுகொடியேற்றத்துடன் தொடங்கியது.