2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை திருவிழா கடந்த 13 -ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேர்த் திருவிழா தை மாதம் பூசம் நட்சத்திரம் தினத்தன்று நடைபெறும். நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இன்று  சுவாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.