இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியான சும்பாவாவில், இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்கா நிலவியல் ஆய்வகம் பதிவுசெய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.