போலியான செய்திகளைப் விரைவாக ஃபார்வர்டு செய்து வைரலாக்குவதில் வாட்ஸ்அப் முன்னணியில் இருப்பதாக வாட்ஸ்அப் செயலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. எனவே, அதைத் தடுக்கும் நோக்கில், கடந்த ஜூலை மாதம் இந்தியாவில், ஒரே நேரத்தில் ஃபார்வர்டு செய்யும் நபர்களின் எண்ணிக்கையை 5 எனக் குறைத்தது. தற்போது அதை உலகம் முழுவதும் கொண்டுவந்துள்ளது.