ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோளை, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. நேற்று  இரவு, 11:37 மணிக்கு வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது.