பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது.  இந்த இரு நிலநடுக்கங்களும் பிஜி, தோங்கா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ளது.  இது 500 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.