கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வங்கதேசத்தை சேர்ந்த தனியார் விமானம்  நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 51 பேர் உயிரிழந்தனர்.  ‘மன உளைச்சலில் இருந்த விமானி, கவனக் குறைவு, அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என நேபாளத்தின் விசாரணைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.