`ஜியோ ரயில்' (Jio Rail) என்னும் செயலியை அறிமுகம்செய்துள்ளது ஜியோ நிறுவனம். இது, ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயங்கும். இந்தச் செயலி மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் முன்பதிவுசெய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்யவும் முடியும். இந்தச் செயலியில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் இ-வேலட் முறையிலும் டிக்கெட் வாங்கலாம்!