திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி மாசித் திருவிழா பிப்ரவரி 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 19-ம் தேதியும், 20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும்  நடைபெறும். பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.