பிரேசில் நாட்டில் வங்கி ஊழியர் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையில் பணிக்கு வந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரல் ஆக, அந்த நபர் குறித்து விசாரித்ததில், அவருக்கு அந்த வங்கியில் அன்று கடைசி நாளாம். அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டாராம். ஆனாலும், எதற்காக இந்த உடையில் பணிக்கு வந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.