யமஹா, புதிய MT-15 பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரப் போகிறது. இந்தியாவில் டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய கொடுக்கப்பட்ட 'Type Approval Certificate' இணையத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்துக்கு முன்பு இந்த பைக் விற்பனைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.