ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய `ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிமப் பொருள் கலந்திருப்பதால் பேபி பவுடரை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அங்கமான தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.