தாய்லாந்தின் பாங்காக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் காற்றில் நச்சுப் புகையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. காற்று மாசு பாதிப்பை தடுக்கும் முகமூடி அணிய வேண்டும், சீன புத்தாண்டிற்கு காகிதங்கள் என எதையும் எரிக்கக் கூடாது எனவும் மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.