சர்வதேச அளவில் 200 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை  இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார்.  நியூஸிலாந்து அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்தார். 1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ்  இதுவரை 200 போட்டிகளில் விளையாடி உள்ளார்.