ஆன்மிக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. கோயிலில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மெதுவாக நடந்து வருவதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வீர வசந்தராயர் மண்டபம் பழையபடி மாற வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.