பிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அணை உடைந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.  அணைக்கு அருகே இருந்த சுரங்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.