இந்திய நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5 -வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 253 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயுடு 90 ரன்கள் எடுத்தார், இறுதிக் கட்டத்தில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட பாண்ட்யா 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.