நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் ஓவரை  நீஷம் எதிர்கொண்டார். பந்து பேட்டில் படாமல் பேடில் பட்டது நடுவரிடம் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. அதற்குள் நீஷம் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட, சாண்டர் மறுத்துவிட்டார். நீஷம் திரும்பி பார்க்கையில் ஸ்டெம்புகள் மின்னியது. தோனி மாயாஜாலம் காட்ட நீஷம் அவுட்டானார்.