இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி குறித்துப் பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,  `ஷமி கடந்த 5 மாதங்களாகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். யோ-யோ டெஸ்ட்டில் முதலில் தோல்வி அடைந்த ஷமி, அதன் பின்னர் கடுமையான பயிற்சிகள் செய்து அணிக்குத் திரும்பினார், அன்று முதல் இன்று வரை சிறப்பாக பந்துவீசி வருகிறார்’ என்றார்.