பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் தென்னாப்பிரிக்கா வீரரை இனவெறி தூண்டும் விதமாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு 4 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சர்ஃப்ராஸ், `உலகக்கோப்பை தொடரில் நான் கேப்டனாக செயல்படுவது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல் கிடைத்திருக்கிறது’ என்றார்.