இன்று தை அமாவாசையை முன்னிட்டு நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள காவிரி சங்கமத்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் பூம்புகார் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது.