தை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூலோக கயிலை எனப்படும் சதுரகிரி மலையில் பக்தர்கள், நேற்று இரவிலிருந்தே வரத் தொடங்கினர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.