ரெனோ நிறுவனம், இந்தியாவில் தனது டாப் செல்லிங் காரான க்விட்டின் மேம்படுத்தப்பட்ட மாடலைக் களமிறக்கி இருக்கிறது. 6 கலர்கள் மற்றும் 8 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (2.78 - 4.75 லட்ச ரூபாய்), சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த க்விட் பேஸ்லிஃப்ட் மாடலின் அதே விலையில் வந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.