இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி  20 ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. டிம் செய்ஃபெர்ட் 84 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணி  டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது இதுவே முதல்முறை.