இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ரன்கள் அடிப்படையில் இந்திய அணிக்கு இதுவே மோசமான தோல்வி. இதற்கு முன்னதாக, கடந்த 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.