விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநராக இருந்த வெங்கட் மோகன் இயக்குகிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, ராஷி கண்ணா நடிக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.