நடிகர் பிரபுதேவா காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு, ஏற்கெனவே அவர் நடித்த 'சார்லி சாப்ளின் - 2' வெளியாகியிருக்கும் நிலையில், மேலும் 'பொன்மாணிக்கவேல்', 'தேவி - 2', 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்' என ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இவையல்லாமல், சல்மான் கானை வைத்து விரைவில் 'டபாங்-3'யையும் இயக்கவிருக்கிறார்.