வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்துள்ளது. இதன்மூலம் தற்போதைய வட்டி விகிதமான 6.50 சதவிகிதமானது 6.25 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் வெளியிட்டார். இதற்கு முன்னர், கடந்த 2017 -ம் ஆண்டு வட்டிவிகிதம் குறைக்கப்பட்டது.