இயக்குநர் சசிகுமார் மற்றும் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக வேலைபார்த்த சுரேஷ் குமார், 'டூப்ளிகேட்' என்ற படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் ஜானரான இந்தக் கதையில் ஹீரோயினாக, டப்ஸ்மாஸ் மிருணாளினி கமிட் ஆகியுள்ளார். 'உத்தரவு மகாராஜா' படத்தில் ஹீரோவாக நடித்த உதயா, இந்தப் படத்தைth தயாரிக்க இருக்கிறார்.