ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT650 தவிர மற்ற மாடல் பைக்குகளின் விலை 1,500 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. புதிய விலைகள், இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே அமலுக்கு வந்துவிட்டன. தொடர்ச்சியாக அதிகரித்துவரும் உற்பத்திச் செலவுகள் இதற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.