திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்யஜித் பீஷ்வாஸ் என்ற எம்.எல்.ஏ நேற்று மாலை அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.கதான் காரணம் என அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.