பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு வந்த பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி,  மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே மோதல் நிலவியது.