ஆற்காடு அருகே வட ராமேஸ்வரம் என்று பிரசித்திபெற்ற ராமநாதேஸ்வரர் சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இங்குள்ள சிவபெருமானை மனமுருகி வேண்டினால், ராமேஸ்வர தரிசனத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.